லட்சுமி என்ற சர்ச்சைக்குரிய குறும்படத்தை இயக்கியவர் சர்ஜுன். இவரது இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் நடித்துள்ள படம் ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’.
இந்தப் படத்தின் பர்ஸ்ட்காப்பி ரெடியாகி சென்சார் செய்யப்பட்ட நிலையில் மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. இதையறிந்த பாப்டா தனஞ்செயன் ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’. படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனாலும் சில பல சிக்கலால் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படத்தை 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.