Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

June 5, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல, அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

குருணாகல், சாமோதய வித்தியாலயத்தின் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம் மற்றும் கேட்போர் கூடம் ஆகியவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

நாம் இந்த வித்தியாலய வளாகத்திற்கு வந்த தருணத்திலிருந்தே மாணவர்களின் திறமைகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் நமது நாட்டு மக்கள் அனைவரும் இந்த மாணவர்களின் திறமைகளைக் காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் கல்விக் கொள்கையாகும்.

கட்டடங்களை மாத்திரம் பெற்றுக்கொடுப்பதால் கல்வி பூர்த்தியடைவதில்லை. அதன் உள்ளடக்கமும் மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும். ஒரு பிள்ளை தனது வீட்டுக்கு வெளியே அதிக நேரத்தைச் செலவிடுவது பாடசாலையில் என்பதால், அந்தச் சூழலில் அன்பு நிறைந்திருப்பது கட்டாயத் தேவையாகும் என்றார்.

07 மாத காலத்துக்குள் 41 மில்லியன் ரூபா செலவில் இந்த நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மாணவர்களின் பயன்பாட்டுக்குக் கையளித்தமை குறித்துத் தனது பாராட்டைத் தெரிவித்த பிரதமர், நிகழ்வின் ஞாபகார்த்தமாகப் பாடசாலை வளாகத்தில் சிறுநாகப்பூ மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026
பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

June 5, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

June 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result