Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மோசமான தோல்விகளைத் தழுவி தொடரை 0 – 2 என பறிகொடுத்துள்ள இலங்கை, ராவில்பிண்டியில் இன்று இரவு நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்ட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் 22 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கை, ஆசிய விளையாட்டு விழாவில் பங்களாதேஷுடனான வெற்றி உட்பட 6 வெற்றிகளை மாத்திரமே ஈட்டியுள்ளது. 

பல்லேகலையில் கடந்த பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை வெற்றியீட்டிய பின்னர் ஆசிய விளையாட்டு விழாவில் ஒரு போட்டியைத் தவிர்ந்த ஏனைய 13 போட்டிகளில் 12இல் தோல்வி அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான இரண்டு ரி20 போட்டிகளிலும் இலங்கைக்கு தோல்விகளே மிஞ்சின.

தொடரும்  மாற்றங்கள்

இந்தக் காலப்பகுதில் இலங்கை அணியில் தலைவர்களும் வீரர்களும் அடிக்கடி மாற்றப்பட்டனர்.

இலங்கையின் புதிய தலைமைப் பயிற்றுநராக கெறி கேர்ஸ்டன் கடந்த தமிழ் சிங்கள புத்தாண்டுடன் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இலங்கை துடுப்பாட்ட வரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வீரர்கள் பரீட்சிக்கப்பட்டனர். ஆனால், ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் நீங்கலாக கடந்த 6 மாதங்களில் 8 போட்டிகள் விளையாடப்பட்டுள்ள போதிலும் நிலையான துடுப்பாட்ட வரிசையை இன்னும் காணமுடியவில்லை.

பாகிஸ்தானுடனான முதல் இரண்டு போட்டிகளில் இலங்கையின் பவர்ப்ளே ஆட்டம் துடுப்பாட்டத்திலும் சரி, பந்துவீச்சிலும் சரி மோசமாகவே இருந்தது. போதாக்குறைக்கு மத்திய வரிசை வீரர்களாலும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்க முடியவில்லை.

இவ்வாறான நிலையில்,  இன்றைய போட்டியில் இலங்கையிடமிருந்து நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியும் என்பது சந்தேகமே.

கலாச்சாரம் காண்

வியாஸ்காந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுடனான ரி20 தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெறும் வீரர்களில் இதுவரை ஒரு போட்டியிலும் விளையாடாமல் இருக்கும் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு இன்றைய போட்டியிலாவது வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, முதலாவது போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகேவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் சஹான் ஆராச்சிகே, வேகப்பந்தவீச்சாளர்களில் ஒருவர் அல்லது மஹீஷ் தீக்ன ஆகியோரே வழிவிட வேண்டிவரும்.

இந்தத் தொடரில் பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் சகலதுறைகளிலும் தொடர்ச்சியான திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளது.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை.

Previous Post

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் : சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Next Post

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

Next Post
நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

October 13, 2026
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் : சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

October 13, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

October 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures