Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நூறுநாள் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல

June 5, 2018
in News, Politics, World
0

நூறுநாள் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த சகலரும் இணைந்து தயாரித்த கொள்கைத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும், ஊடகப் பிரிவின் பிரதானியுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘மைத்திரி நிர்வாகமும், நூறு நாட்களில் புதிய நாடும்’ என்ற வாசகத்துடனேயே நூறுநாள் வேலைத்திட்டம் குறித்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்தே நூறுநாள் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடகப் பிரிவு ‘சத்ய’ (உண்மை) என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும், ஊடகப் பிரிவின் பிரதானியாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருடைய தலைமையில் தற்பொழுது புதிய ஊடகப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி உண்மையான செய்திகள் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவேதான், உண்மையான செய்திகளை வழங்குவதற்கு ‘சத்ய’ ஊடக வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக உண்மையான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கவுள்ளோம்.

இந்த உண்மைச் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருப்பதுடன், உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளை சரியாகவும், தெளிவாகவும், விபரமாகவும், விரைவாகவும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது மற்றும் அது தொடர்பில் சமூகத்துக்கு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்குவது இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கட்சி என்ற வகையிலும், அரசாங்கம் என்ற வகையிலும் முன்னெடுக்கும் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் தேடிப்பார்ப்பதற்கான உரிமையை ஊடகங்களுக்கு வழங்கி, அதன்மூலம் பொதுவான ஊடக குழு என்ற வகையில் கட்சியின் அங்கீகாரத்துடன் ஊடகங்களுக்கு செய்திகள் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பெரும்பாலான விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது.

எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட காலத்துக்குள் சகலவற்றையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் ஊடகங்களினால் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை.

உதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட சுரக்ஷா காப்புறுதித்திட்டத்தைக் கூறலாம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முகங்களுடன் கூடிய பாடசாலைப் பைகள் மற்றும் பனர்களை வைத்து நாம் இத்திட்டத்தை பிரபலப்படுத்தவில்லை.

இதுபோன்ற பல திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை. எனவேதான் உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்க இந்த ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது

Next Post

பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை

Next Post

பத்திரிகைகள் கோட்டாபயவுக்கு பயந்து அவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

July 15, 2026
MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ்

July 15, 2026
அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி

தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து புதிய சுற்று நிரூபம்

July 15, 2026
“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே புரோக்கர் கூட்டங்கள் – இளங்குமரன்

July 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures