ஆஸ்திரேலியாவில் முதலை மனிதன் என்று வர்ணிக்கப்படும் ஸ்டீவ் இர்வினுக்கு அடுத்தபடியாக மற்றொரு நபர் முதலையை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
உலகப் புகழ்பெற்ற முதலை மனிதன் ஸ்டீவ் இர்வின் கடந்த 2006ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த மேட் ரைட் ((Matt Wright)) என்பவர் முதலைகளை வைத்து சாகச நிகழ்ச்சி செய்து வருகிறார். 12 அடி நீளமுள்ள முதலையை வளர்த்து வரும் மேட் அதன் தலையைத் தடவிக் கொடுத்த பின், தான் வைத்திருக்கும் தொப்பியைக் காட்டும் போது, அந்த பிரமாண்டமான முதலை அதனைப் பிடிக்க எட்டிப் பாய்கிறது. பார்ப்பவர்களை புல்லரிக்க வைக்கும் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.













