1998ல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நித்யாமேனன். தமிழில் சித்தார்த் நடித்த நூற்றெண்பது என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் பின்னர், வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் என பல படங்களில் நடித்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தி அயர்ன் லேடி படத்திலும் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் அக்சய்குமார் நடிப்பில் வெளியான மிஷன் மங்கள் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார். இதுவரை 49 படங்களில் நடித்துவிட்ட நித்யாமேனன், தற்போது தனது 50வது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதுகுறித்த தகவலை தனது இணைய பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
மலையாளத்தில் தயாராகும் அந்த படத்தின் பெயர் ஆரம் திருக்கல்பனா என்று குறிப்பிட்டுள்ள அவர், கிரைம் கதையில் உருவாகும் இந்த படத்தை அஜய் தேவலோகா இயக்க, ஷைன் டாம் சாக்கோ நாயகனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.