எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னட நடிகையான இவர் அதன்பிறகும் தமிழில் வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா என பல படங்களில் நடித்தார். 2006ல் கர்நாடக முன்னாள் முதல்வராக குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட குட்டி ராதிகா சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர் மறுபடியும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் ஒரு சரித்திர படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். நவரசன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு தமயந்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை அணுகியதாகவும், அவர் சில படங்களில் பிசியாக இருப்பதால் அந்த வேடத்திற்கு குட்டி ராதிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ஒருசெய்தி வெளியாகியிருக்கிறது.