ஒரு படத்தின் டீசர் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்து விட்டால், அந்த படத்திற்கு அவர்களை சிந்தாமல் சிதறாமல் அழைத்து வந்துவிடலாம்.. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சியைத்தான் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்துவரும் கானகந்தர்வன் பட இயக்குனர் ரமேஷ் பிஷரோடி எடுத்துள்ளார். இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
இதில் ஒரு சாலையோர ஹோட்டல் கடை ஒன்றில் அமர்ந்து தன் முன்னே வைக்கப்பட்டுள்ள ஆப் பாயில் ஒன்றின் மஞ்சள் கரு உள்ள நடுப்பகுதியை மட்டும் ஸ்பூன் ஒன்றினால் வட்டமாக வெட்டி அதை கீழே நழுவாமல் தனது வாயில் போடுகிறார் மம்முட்டி. இதுதான் அந்த 5௦ செகண்ட் டீசர் முழுவதும் இடம்பிடித்துள்ளது. இப்படியும் ஆப்பாயில் சாப்பிடலாமா என்கிற ரீதியில் அமைந்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.