ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தேசிய விருது பெற்ற இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். பிரஷாந்த் நடிக்கிறார். கவுதம் மேனன் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தாதுன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் ஹரி சங்கர். நிதின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தபு, ராதிகா ஆப்தே வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடை பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை 3.9 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்.