தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பரிமளா & கோ’ என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரிமளா & கோ ‘ திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார் , தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் – தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – பசங்க புரொடக்ஷன்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் – தமிழ் குமரன் – பாண்டிராஜ்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடுத்தர வர்க்கத்து மக்களின் யதார்த்தமான நாளாந்த வாழ்வியல் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
