மே மாதம் 1ஆம் திகதி முதல் தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா விஷேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை ஆவணம் அடுத்தவார அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

