சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்போம் என்ற கருப்பொருளில் வவுனியாவில் இன்று (01) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தேரர் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததோடு, பௌத்த தேரருக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.















