மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிராவ் ஹைதரி. தொடர்ந்து ஹிந்தியில் நடித்தவர், இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் ஜோதிகாவைப்போன்றே அதிதிராவும் பெண்ணுரிமைக்காக போராடும் வேடத்தில் நடிக்கிறாராம். இதையடுத்து தெலுங்கில் சம்மோஹனம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் அதிதிராவ் ஹைதரி.