Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர் நீதிமன்றம்

January 26, 2018
in News, Politics, World
0

சுதந்திரப் போராட்ட தியாகியின் வீட்டுக்கு சென்று, ‘பென்ஷன்’ வழங்குவதற்கான உத்தரவை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகியை அதிகாரிகள் கஷ்டப்பட வைத்ததற்காக, அவரிடம், நீதிமன்றம் மன்னிப்பும் கோரியது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர், வி.காந்தி; நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பதில் இல்லை

பர்மா, ரங்கூன் சிறையில், 1945 மே மாதம் முதல், டிசம்பர் வரை அடைக்கப்பட்டார். மாநில அரசின் பென்ஷன் கேட்டு, 1980ல், விண்ணப்பித்தார்; 12௨ ஆண்டுகள் காத்திருந்தார்; எந்த பதிலும் இல்லை. 1992 நவம்பரில், நினைவூட்டும் கடிதம் அனுப்பினார்; அரசு பரிசீலிக்கவில்லை.
ரங்கூன் சிறையில், காந்தியுடன் இருந்த காளிமுத்து என்பவர், சான்றிதழ் வழங்கினார். மத்திய அரசின் பென்ஷன் தொகையை, காளிமுத்து பெற்று வந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில், கர்னலாக இருந்த, டாக்டர் லட்சுமி ஷாகலும், சான்றிதழ் வழங்கினார். இந்த சான்றிதழ்களை எல்லாம் அனுப்பியும், பென்ஷன் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், காந்தி மனு தாக்கல் செய்தார். 89 வயதாகும் தனக்கு, கால தாமதம் செய்யாமல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் வழங்கும்படி கோரியிருந்தார். மனுவை, நீதிபதி, ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.புருஷோத்தமன் ஆஜரானார்.நீதிபதி, ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, டாக்டர் லட்சுமி ஷாகல் வழங்கி உள்ளார். மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்பதற்கு, அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் அமைப்பின் தலைவர், குருமூர்த்தியும், கடிதம் அனுப்பி உள்ளார்.
மனுதாரர் வறுமையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றும்படியும், கடிதத்தில் குறிப்பிட்டு
உள்ளார்.
அவசர தன்மை குறித்து கவனத்துக்கு கொண்டு வந்தும், மனுதாரரின் கோரிக்கையை கனிவுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தன்னலம் பாராத பங்களிப்பை ஆற்றியவரின் கோரிக்கையை, அரசு கவனிக்க தவறி விட்டது. மனுதாரரை போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை, கவனிக்க தவறி விட்டனர்.

நாட்டின் விடுதலைக்காக போராடியவரை, சுதந்திரம் கிடைத்த பிறகும், பென்ஷனுக்காக போராடத் தள்ளியது வருத்தம் அளிக்கிறது. சுதந்திரத்துக்காக போராடியவர்களை, கண்ணியத்துடன் கவுரவப்படுத்த வேண்டும். அவர்களை அழைத்து, மரியாதை செய்ய வேண்டும்; காக்க வைக்கக் கூடாது. அவருடன் இருந்த சிறைவாசி, கர்னல் லட்சுமி ஷாகல் ஆகியோர் சான்றிதழ் அளித்திருக்கும் போது, அதிகாரிகளின் மனதில் சந்தேகம் வரக் கூடாது.
பென்ஷன் கோரிய விண்ணப்பத்தை நிராகரிப்பதற்காக, ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். அவரது வயது குறித்து, சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

அதிகாரிகள் கூறிய காரணங்களை ஏற்க முடியாது. ‘நம் அதிகாரிகள், உங்களை கஷ்டப்பட வைத்ததற்காக, மன்னிப்பு கேட்கிறேன். சுதந்திரத்துக்காக போராடிய இந்த நாட்டில், அதிகார வர்க்கத்தின் வறட்டு பிடிவாத செயல்பாடு துரதிருஷ்டவசமானது’ என்பதை மட்டுமே, மனுதாரரிடம் கூற முடியும்.சுதந்திரப் போராட்ட வீரரான காந்திக்கு, பென்ஷன் வழங்குவதற்கான உத்தரவை, அவரது வீட்டுக்கே சென்று, அதிகாரிகள் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களில், அதை வழங்க வேண்டும். நான்கு வாரங்களில், பென்ஷன் பாக்கியை கணக்கிட்டு தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Previous Post

கிரிக்கெட் வீரர் தோனி, தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்மபூஷண் விருது!

Next Post

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!

Next Post

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures