நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்தும் ஆட்சியமைக்கும் உரிமை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்“நாட்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியாத அரசாங்கத்திற்கு வாக்களிப்பதில் எதுவித நன்மையும் இல்லை.
தற்போதைய அரசாங்கம் 7 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இழந்துள்ளது. ஆனால் அவர்களால் அதனை கண்டுபிடிக்கமுடியவில்லை.
அவ்வாறானவர்களினால் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே தற்போதைய அரசாங்கத்திற் தொடர்ந்தும் ஆட்சியமைக்கும் உரிமை இல்லை.
அவர்கள் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்து விட்டது. எனவே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களை ஆட்சியாளர்களாக தெரிவு செய்யும் போது நாடு அபிவிருத்தி பாதையை நோக்கி செல்லும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.