2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk இன் பெறுபேறுகள் பக்கத்திற்குச் சென்று, மாணவர்கள் தங்களின் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்றிருந்ததுடன், நாடுமுழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் சுமார் 294,089 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













