Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தரம் தாழ்ந்த கமெண்டுகளால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

October 20, 2018
in News, Politics, World
0

டிக்டாக் செயலியில், தனது வீடியோக்களுக்கு தரம் தாழ்ந்த வகையில் கமெண்டுகள் வந்ததால், அதனால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ம் தேதி வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருந்த தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர், உடல் சிதைவுற்ற நிலையில் இறந்து கிடந்தார். அந்த உடலை கைப்பற்றிய போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயர் கலையரசன் (24) என்பதும், அவர் வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது இறப்பு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் கலையரசனின் கைப்பேசி மட்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தி புகார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் புகாரை அடுத்து விசாரணை நடைபெற்ற நிலையில், இறந்த வாலிபர் கலையரசன், ’மியூஸிக்கலி’ என்கிற ’டிக்டாக்’ செயலியில் பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனார். அதில் பெரும்பாலான வீடியோக்களில் பெண் போல பாவனை செய்து நடித்தும், பெண்கள் பாடியை பாடல்களை பாடுவது போல நடித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

கலையரசனின் இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்மறையாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். மேலும், தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அவரை பலரும் விமர்சித்திருந்தனர். இதுகுறித்து வருந்திய கலையரசன் ”தகாத வார்த்தைகள் வேண்டாம்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் டிக்டாக்கில் வெளியிட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த கலையரசன் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது அவரது இறப்புக்கு காரணம் வேறு ஏதாவது குடும்ப பிரச்னையா..? என்ற ரீதியில் பெரம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் இளைஞர் கலையரசனின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கலையரசனின் வீடியோவுக்கு எதிர்மறையான கருத்துக்களை பதிந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Previous Post

மைசூரு அரச குடும்பத்தில் ஒரே நாளில் இரட்டை மரணம்

Next Post

நிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி

Next Post

நிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures