Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை வழங்க நாங்கள் தயார் | தமிழர் விடுதலைக் கூட்டணி

March 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை வழங்க நாங்கள் தயார் | தமிழர் விடுதலைக் கூட்டணி

சுயநலம் மேலோங்கியுள்ள தமிழ்க் கட்சிகள் தங்களது கடமைகளில் இருந்து தவறிவிட்டன எனவும், அந்தத் தலைமைத்துவ இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிச்சயம் நிரப்பும் எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

“புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ் மக்களுக்கான முறையான தலைமையை வழங்கும் நோக்குடன் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்த போதிலும், தற்போது இளைஞர்களின் பங்களிப்புடன் புதிய உத்வேகத்துடன் முன்னிலையான அரசியல் பாதையை நோக்கி நாங்கள் நகர்ந்து வருகின்றோம்.

தற்போது தமிழ் மக்கள் முறையான தலைமைத்துவம் இன்றி இக்கட்டான நிலையில் வாழ்கின்றனர். எந்தவொரு தமிழ்க் கட்சியும் மக்களின் விடுதலைக்கான சரியான பாதையைத் தெரிவு செய்யவில்லை. தொடர்ச்சியாகப் பிழையான பாதையிலேயே அக்கட்சிகள் பயணிக்கின்றன. கட்சிகளுக்குள் பொதுநலன் மறைந்து சுயநலம் குடிகொண்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளுக்குப் போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு விட்டன. 2009 யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட நீண்ட காலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் தங்களது கடமைகளைச் சரியாக நிறைவேற்றவில்லை. நிச்சயமாக அந்த அரசியல் இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிரப்பும் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடு எப்போது தளர்வடையத் தொடங்கியதோ, அன்றே தமிழ் மக்களின் வாழ்க்கையும் தளர்ந்துவிட்டது. தந்தை செல்வா மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் ஆகியோருடன் நேரடித் தொடர்பிலிருந்த ஒரே தலைவர் வீ. ஆனந்தசங்கரி மட்டுமே. அவரே இக்கட்சியைத் தற்போதும் வழிநடத்தி வருகின்றார்.

மூத்தவர்களின் கடந்த கால அனுபவங்களும், எங்களது புத்திசாலித்தனமுமே இந்தத் தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும். எனவே, தமிழ் மக்கள் எங்களை நம்புங்கள், இளைஞர்கள் எங்களுடன் இணையுங்கள் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.

இந்த ஊடகச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வன்னி மாவட்டக் கிளைத் தலைவர் உதயன், செயலாளர் திவா, இளைஞரணிச் செயலாளர் பத்மகாந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டின் நிலைமை தொடர்பில் மௌனம் கலைத்த மகிந்த

Next Post

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது…. | சஜித் பிரேமதாச

Next Post
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது…. | சஜித் பிரேமதாச

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures