தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘டோரதி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
ரூரல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தம்மம் பிலிம்ஸ் – சீக்யா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இதனை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் திகதி முதல் இருபதாம் திகதி வரை டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைப்படம் – உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதியன்று வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிப்பையும் படக்குழு படத்திற்கான அறிமுக காணொளியில் இணைத்து வெளியிட்டிருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.












