Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டெல்லியை அதிர வைத்த ஆணவக்கொலை

February 3, 2018
in News, Politics, World
0

மன்னார்குடி அருகே காதலித்துத் திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள்தண்டனை விதித்து தஞ்சைக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமோர் ஆணவக் கொலை அரங்கேறியுள்ளது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் அல்ல, தலைநகர் டெல்லியில்.

ஆம், தலைநகர் டெல்லியில்தான் 23 வயது இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் அங்கித் சக்சேனா. 23 வயதாகும் இவர், டெல்லி ரகுவீர் நகர் அருகே வசித்து வருகிறார். இவரும் அதேப் பகுதியில் உள்ள மாற்றுச் சமூகத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே காத்திருக்கும் தன் காதலியைச் சந்திப்பதற்காக அங்கு சக்சேனா சென்றபோது, அப்பெண்ணின் தந்தை, தாய், தம்பி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் அவரை வழிமறித்து தாக்கத் தொடங்கினர். இதில் பெண்ணின் தந்தை, தொடர்ந்து அங்கித் சக்சேனாவின் தொண்டை மற்றும் இடுப்புப் பகுதியில் தாக்கியுள்ளார்.

இதை தடுக்க வந்த அங்கித்தின் தாயையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அங்கித் உயிரிழக்கவே, அவரின் தாய் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், புகாரின் அடிப்படையில் அப்பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர். மேலும் பெண்ணின் தம்பி மைனர் என்பதால் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பரபரப்பான ரகுவீர் நகரில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பா.ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி முறிகிறது

Next Post

தேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி!

Next Post

தேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures