பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாகவும், 79 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட காரியாலய கட்டிடத் தொகுதியொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளன.

