கதைக்கு மட்டுமல்ல; கதையில் தன் கேரக்டருக்கு முக்கியத்துவமிருக்கும் படங்களாகப் பார்த்து, பார்த்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. அவர் நடிப்பில், கடந்த இரு மாதங்களுக்கு முன் வெளியான ராட்சசி படம், வணிக ரீதியில் பெரும் வெற்றி பெறவில்லை. ஆனால், அந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றிந்தது.
இந்நிலையில், இந்தப் படம், ஒரு சமூக மாற்றத்துக்கான படம் என, இந்தப் படத்தைப் பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் சமூக வலைதளம் மூலம் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராட்சசி படம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. கல்வி வளர்ச்சிக்குத் தேவையான பல விஷயங்களை இந்தப் படம் மிக அற்புதமாக பேசியிருக்கிறது. கல்வித் துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், இந்தப் படத்தில் சொல்லியிருக்கின்றனர். இந்தப் படத்தில், நடிகை ஜோதிகா மிக பிரமாதமாக நடித்திருப்பதோடு, ஆழமான-அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாக பார்த்துப் பார்த்து அவர் நடித்து வருவது, சமூகத்தில் அவருக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது. கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் – ராட்சசி.
இவ்வாறு மாஸ்லே கூறியிருக்கிறார்.