Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி, பிரதமருக்கு வெளிநாட்டுத் தடை இல்லை

November 21, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டு பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்த் தரப்பினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, நேற்று முன்தினம் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்திருந்தார். எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அத்துடன், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அலரி மாளிகையில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து வருவதாக தற்போதைய அரசாங்க குற்றம் சாட்டியுள்ளது. இவர்களிடம் இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தவறான கருத்துக்களை எதிர்த் தரப்பினர் பரப்பிவருவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் தீர்மானம்

Next Post

கல்வி நிலையல்ல காரணம் நாட்டுப் பற்று- M.P. கள் விளக்கம்

Next Post

கல்வி நிலையல்ல காரணம் நாட்டுப் பற்று- M.P. கள் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures