பாராளுமன்றத்தில் கல்வி நிலைமை குறைந்தவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தமது கல்வி நிலைமை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் சில அரசியல்வாதிகள் தெரிவித்ததாக எமது கல்வி நிலை குறித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முற்றிலும் பொய்யானது என பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரஞ்ஜித் சொய்சா, சனத் நிஷாந்த ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளனர்.
சபாநாயகரின் பாராளுமன்ற செயற்பாடு ஜனநாயகத்துக்கு முரணானதாக கண்டபோது, நாட்டுப் பற்றுள்ள இரத்தம் எம் உடலில் இருப்பதனாலேயே நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். எமது கல்வி நிலையில் பின்னடைவினால் அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தமது கல்வி நிலை தொடர்பில் தாம் கற்ற பாடசாலையில் விரும்பியவர்கள் கேட்டறிந்து கொள்ளலாம் எனவும், பொய்யான வந்திகளை பரப்புவர்கள் யார் என்பதை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சனத் நிஷாந்த எம்.பி. சாராயம் வடித்தவர் எனவும், அவர் தரம் 4 வரைதான் கல்வி கற்றவர் எனவும், சொய்சா எம்.பி. மீன் விற்பனை செய்தவர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அவர்களிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளனர்.

