Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளியோம் | தினேஷ் குணவர்தன

July 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளியோம் | தினேஷ் குணவர்தன

ஜனநாயக ரீதியிலான, அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம். இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் பாராளுமன்றம் இடமளிக்காது.

நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள். அதனை பாராளுமன்ற கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்றுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (27) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது சிறப்பு கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் ஜனநாயகத்தின் கேந்திர மத்திய மையமாக பாராளுமன்றம் உள்ளது. நாட்டின் சகல செயற்பாடுகளுக்குமான தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றினைந்து செயற்படுகிறார்கள்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்தை பாதுகாக்கும் வகையில் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் குறிப்பிட்டுக்கொள்கிறேன். தற்போதைய நெருக்கடியான தன்மையை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும்.

ஜனநாய கொள்கையை பாதுகாக்க ஆரம்ப காலத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள்.அரசியலமைப்பிற்கமைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் அவதானம் செலுத்துகையில்,நிறைவேற்று தெரிவு குழு ஸ்தாபிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் நிறைவேற்று தெரிவு குழுவில் அங்கம் வகிக்க முடியும்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள ஏழ்மை நிலைமை பாரதூரமானது,இதன்காரணமாகவே போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

எரிபொருள்,எரிவாயு விநியோக கட்டமைப்பை சீர் செய்வதற்கு முறையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எரிவாயு விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளன.உணவு பாதுகாப்பு தொடர்பில் பொருத்தமான திட்டங்களும் அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக குரல்,அமைதி வழி போராட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவோம்.இருப்பினும் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளிக்க முடியாது.ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பாராளுமன்றம் இடமளிக்காது.நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளார்கள்.மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

Previous Post

அரகலயவின் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் | கண்காணிக்கப்படுகின்றனர்.

Next Post

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் இலங்கை

Next Post
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் பலமான நிலையில் இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures