Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ச்சப்பக்’ – தீபிகாவுக்குக் குவியும் பாராட்டுக்கள்

March 25, 2019
in Cinema
0

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே அடுத்து ‘ச்சப்பக்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேக்னா குல்சார் இயக்க உள்ள இந்தப் படம் ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய படமாகும்.

இந்தப் படத்திற்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. அதில் ஆசீட் வீச்சு பாதிப்பால் முகத்தில் தோல் சுருக்கங்களுடன் இருக்கும் தீபிகா படுகோனேவின் தோற்றம் மிக இயல்பாக உள்ளது. அதற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

லட்சுமி அகர்வால் அவருடைய 15வது வயதில் ஆசீட் வீச்சுக்கு ஆளானார். தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த லட்சுமி மீது ஒருவர், அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஆசீட் வீசினார். அதில் காயமடைந்து தன் அழகான முகத்தோற்றத்தை இழந்தவர் லட்சுமி. அதன் பின் அவர் ஆசிட் விற்பனைக்குத் தடை விதிக்கவும், அதனால் ஏற்படும் வன்முறைகளை எதிர்த்தும் போராடி வருகிறார். ‘ஸ்டார் சேல் ஆசிட்’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.

2014ம் ஆண்டு சர்வதேச துணிச்சல் பெண் விருதை அப்போதைய அமெரிக்க அதிகர் ஒபாமாவின் மனைவி மிட்சேல் ஒபாமாவிடம் இருந்து பெற்றார்.

‘ச்சப்பக்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் டில்லியில் ஆரம்பமாகிறது. இப்படத்தை தன் சொந்த நிறுவனமான கேஎ என்டர்டெயின்மென்ட் மூலம் பாக்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா தயாரிக்கிறார். இப்படம் 2020 ஜனவரி 20 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ராதாரவி பேச்சு – விசாகா கமிட்டி வேண்டும் : நயன்தாரா

Next Post

மோகன்லால் பட டிரைலரை அபுதாபியில் வெளியிட்ட மம்முட்டி

Next Post

மோகன்லால் பட டிரைலரை அபுதாபியில் வெளியிட்ட மம்முட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures