Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சி.ஐ.டி விசாரணையில் பல்டி அடித்தார் விமல்: காவல்துறை தீவிர விசாரணை!

October 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பெலியத்தே சனா என அழைக்கபட புவக்தண்டாவே சனாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவரை ஜேவிபியின் தீவிர உறுப்பினராக ஒருபோதும் அடையாளம் காணவில்லை எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையானமை தொடர்பாக காவல்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெலியத்தே சனா அல்லது புவக்தண்டாவே சனா என்ற நபர்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அளித்த வாக்குமூலம் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் காரணமாக அவரிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அறிக்கை

அதன்படி, குறித்த பிரிவினரால் விசாரிக்கப்பட்டபோது, ​​விமல் வீரவன்ச இவ்வாறு பதிலளித்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொள்வது அரசாங்கம் எனவும் போதைப்பொருள் சோதனைகள் அரசின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது நிலவும் பொதுவான சூழ்நிலையின் அடிப்படையில் என விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

சி.ஐ.டி விசாரணையில் பல்டி அடித்தார் விமல்: காவல்துறை தீவிர விசாரணை! | Wimal Weerawansa S Confession

பெலியத்தே சனா எனப்படும் புவக்தண்டாவே சனா என்பவர் போதைப்பொருள் கொண்டு வந்த படகின் உரிமையாளர் என கூறியது அப்போது ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது ஜனாதிபதி அந்தப் பகுதிக்கு பயணம் செய்தபோது, புவக்தண்டாவே சனா என்ற வீரசிங்க சரத்தின் வீட்டிற்கு வந்து உணவு அருந்தவில்லை, மாறாக அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து உணவு அருந்தினார் என்பதை அவர் அறிந்ததாக கூறியுள்ளார்.

ஆதராங்கள் இல்லை

அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த அறிக்கைகளை உறுதிப்படுத்த எந்தவித ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சி.ஐ.டி விசாரணையில் பல்டி அடித்தார் விமல்: காவல்துறை தீவிர விசாரணை! | Wimal Weerawansa S Confession

ஆகவே, பொய்யானது என அறியப்பட்ட தகவல்களை வெளியிட்டமையால் நீதிமன்றத்தில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டு மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இது தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அநுர அரசாங்கத்தின் தந்திரோபாயம்! அம்பலப்படுத்தும் ஜீவன் தொண்டமான்

Next Post

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! – இஸ்ரேல் இராணுவம் தகவல் 

Next Post
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! – இஸ்ரேல் இராணுவம் தகவல் 

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்

August 24, 2026
நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை நயன்தாரா மொட்டை அடித்ததாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

August 24, 2026
இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

இரண்டாவது டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 187 – 3 விக்.

August 23, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

நாடாளவிய ரீதியில் குற்றம், போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 607 பேர் கைது

August 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures