Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

May 19, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும்  லாபகரமான தயாரிப்பாளராகவும் வவம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்சே, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கிராமிய பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த ஆண்டில் வெளியாகி வசூல் சாதனையை படைத்த ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன்- சிவ கார்த்திகேயன் – ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் – ஆகியோரின் கூட்டணியில் தயாராகுவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது .

மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் சந்தோஷத்தை உண்டாக்கி இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Previous Post

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures