தெலுங்குத் திரையுலகின் பெரும் நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ள ‘சைரா’ படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் பட வெளியீட்டிற்குப் பிறகு கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
அந்தப் படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா உள்ளிட்ட ஹீரோயின்களும் அதில் இடம் பெற்றுள்ளார்கள்.
காஜல் அகர்வால், ‘கைதி நம்பர் 150’ படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும், நயன்தாரா, தமன்னா, ‘சைரா’ படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடித்துவிட்டார்கள். சிரஞ்சீவியுடன் இதற்கு முன்பு 2006ல் வெளிவந்த ‘ஸ்டாலின்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.