மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி தொடர்பில் முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்திருந்தார்.
இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த 14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால் அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் வியாழக்கிழமை (20) குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக சந்திப்பும் நடைபெற்றது.













