முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானம் அறிவிக்கவுள்ளது.
குறித்த பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பிலேயே நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (04.11.2026) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








