செய்தியாளராக இருந்து பின், சின்னத்திரை நடிகையாக மாறியவர் ப்ரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர், சமீபத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து, மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, நடிகர் கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அவர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து, பொம்மை படத்திலும் நடித்து வருகிறார்.
இது குறித்து, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மான்ஸ்டர் படத்துக்குப் பின், என்னோட இணைந்து நடிக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர், பொம்மை படத்தில் கொஞ்சம் த்ரிஷாவாகவும், கொஞ்சம் சிம்ரனாகவும் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.