நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜே ரம்யா. இவர், நடிகர் அஜித்தின் ஞாபக சக்தியை புகழ்ந்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகை விஜே ரம்யா கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளுக்கு முன், பில்லா படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அஜித்தை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது; தொலைக்காட்சிக்காக பேட்டி எடுக்க வேண்டி இருந்தது. அப்போது, நான் நடிகர் அஜித்தை சந்தித்தேன். அப்போது, அவரிடம் நிறைய பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில், நான் வளர்க்கும் நாய் குறித்தும் பேச்சு வந்தது. வெகு காலத்துக்குப் பின், சமீபத்தில் நான் அவரை சந்தித்தேன். அப்போது, ரம்யா, உங்க வீட்டு டைகர் எப்படி இருக்கு? அம்மா எப்படி இருக்காங்கன்னு கேட்டார். என்ன ஒரு ஞாபக சக்தி என்று வியப்பாக இருந்தது.