Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழப்பமான சூழ்நிலையில் வெளிநாடு பறந்தார் மைத்திரி!

December 25, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (24) பிற்பகல் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார்.

நாட்டில் அமைச்சரவை தொடர்பான சிக்கல் நீடித்துக் கொண்டிருப்பதுடன், இதுவரை அமைச்சர்களுக்கான கூட்டமும் இன்னமும் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் தனப்பட்ட பயணம் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை. புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் அடங்கும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று (24) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதனை வெளியிடாது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளமையானது மேலும் தாமதங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார். இந்த பயணம் நான்கு நாட்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்னும் 4 நாட்களினால் தள்ளிப்போடப்படும் சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு

Next Post

குடாவெல்ல பிரதேசத்தில் சற்றுமுன் நான்குபேர் படுகொலை

Next Post

குடாவெல்ல பிரதேசத்தில் சற்றுமுன் நான்குபேர் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures