குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்வத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தங்காலை குடாவெல்ல மீன்பிடித்துறைமுகத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

