Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது நேரடித் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

குஜராத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற சுமாரான  வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டி சம்பியனானது.

ராசிக் சலாம், புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், விராத் கோஹ்லியின் அபார துடுப்பாட்டம் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சம்பியன் பட்டத்தை தக்க வைக்க உதவின.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு முதலாவது ஓவரை மிகவும் நிதானத்துடன் ஆரம்பித்து 5 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் வெங்கடேஷ் ஐயர், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களை  விரட்டி விரட்டி அடித்து 50 ஓட்டங்களைக்  குவித்தனர்.

அவர்கள் இருவரும் 27 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

எனினும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் முதல் இரண்டு விக்கெட்கள் ஒரு ஓட்ட வித்தியாசத்திலும் அடுத்த இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத் திலும்   வீழ்ந்தன.

வெங்கடேஷ் ஐயர் 32 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். (62 – 1 விக்.)

அவரைத் தொடர்ந்து தேவ்டத் படிக்கல் (1), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (15), க்ருணல் பாண்டியா (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி ஆட்டம் இழந்தனர். (91 – 4 விக்.)

எனினும் விராத் கோஹ்லி, டிம் டேவிட் (24) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர் செய்து வெற்றியை அண்மிக்க உதவினர்.

விராத் கோஹ்லி நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 75 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஜிட்டேஷ் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ராஷித் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட முன்னாள் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூசூரு அணியின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு என்பன குஜராத் டைட்டன்ஸ் அணியைக் கட்டுப்படுத்தின.

தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

அதிரடிக்கு பெயர் பெற்றவர்களும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியினருமான சாய் சுதர்சன் (12), அணித் தலைவர் ஷுப்மான் கில் (10) ஆகிய இருவரும் முறையே புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் பந்துவிச்சுகளில் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து நிஷாந்த் சிந்து (20), ஜொஸ் பட்லர் (19), அர்ஷாத் கான் (15), ராகுல் தேவாட்டியா (7), ஜேசன் ஹோல்டர் (7), ராஷித் கான் (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

வொஷிங்டன் சுந்தர் 5 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.  கெகிசோ ரபடா ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ராசிக் சலாம் 27 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  புவ்ணேஷ்வர் குமார் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Previous Post

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures