Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாரா : பா.அரியநேந்திரன்

June 10, 2018
in News, Politics, World
0

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்.கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து பேசுகையில்:-

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் பழைய முறையில் விகிதாசார தேர்தலாக நடந்திருந்தால் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழர் பிரதிநித்துவம் உள்ள அனைத்து பிரதேச சபைகளையும் தமிழ்தேசிய கூட்டமைப்பே அறுதிப்பெரும்பான்மை கொண்டு ஆட்சியை கைப்பற்றி இருப்போம்.

வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகள் ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட இந்த 09 வருட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கு இங்கு பல்வேறு சக்திகள் ஊடுருவியிருக்கின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாத அரசியல் செய்வதற்காக பல்வேறு பெரிய கட்சிகள் முதலீடாகப் பணத்தைக் கொடுத்து சிறு சிறு கட்சிகளைத் தோற்றுவிக்கும் செயற்திட்டங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

எங்களிடமும் சிலர் வந்தார்கள். “கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று”அந்தக் கோரிக்கை சரியானது நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல்களை மீட்டுப்பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வடகிழக்கு இணைந்த தாயகத்தினை அடிப்படையாகக் கொண்ட கட்சி. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வரையறை செய்யப்பட்ட அதுவும் சில மாவட்டங்களுக்குள் மட்டும் வரையறை செய்யப்படுகின்ற கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைவதாக இருந்தால் அதற்கான சரியான உடன்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலிலே கொள்கை ரீதியாகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அங்கீகரிக்கின்ற கட்சிகள், வடகிழக்குத் தாயகத்தை அங்கீகரிக்கின்ற கட்சிகள், ஒன்று சேர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தாயகத்தைக் கூறு போட நினைக்கின்ற கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாக இருந்தால் பாரிய பிரச்சனைகள் உருவாகும்.

இதே பிரச்சினைதான் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் இடம்பெற்றது. வடகிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் பலர் வந்தார்கள். இதில் மக்கள் தெளிவு அடைய வேண்டும். முதலில் கொள்கை சரியாக இருக்க வேண்டும். கொள்கை மாறுபடுமாக இருந்தால் அரசியல் பயணமும் மாறுபடும்.

கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு தயாராவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தற்போதே சிந்திக்கத் தொடங்க வேண்டும். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் தாங்களே பிரிந்து ஆசனங்களை எடுத்த போதுதான் அந்தச் சிக்கல் ஏற்பட்டது. அந்த நிலை கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் இருந்தால் அங்கும் உள்ளுராட்சி சபைகள் போன்ற நிலைதான் ஏற்படும் என்பதை தலைமை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சி பார்க்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று தான் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எங்களோடு இருக்கின்ற பங்காளிக்கட்சியொன்று அதனை ஏற்கவில்லை. எனவே பங்காளிக் கட்சிகள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்பு அடிப்படையில் செயற்படுவோமாக இருந்தால் நிச்சயமாக கிழக்கு மாகாணத்தை நாங்கள் கைப்பற்ற கூடிய வாய்ப்பு இருக்கும்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு இந்தத் தேர்தல் முறைதான் காரணம். விகிதாசார முறையில் தேர்தல் இடம்பெற்றிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது சபைகளையும் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்தார்.

Previous Post

கனடாவில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி

Next Post

மறு அறிவித்தல் வரை தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி பீடம் மூடல்

Next Post

மறு அறிவித்தல் வரை தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி பீடம் மூடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures