காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
இளம் ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். தன் இசையால் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இவ்வளவு இளம் வயதிலேயே விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்துவிட்டார்.
இந்நிலையில் பிப்ரவரி 14 , காதலர் தினத்தன்று அனிருத் ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக இதே நாளில் தான் அனிருத் ஒரு ஆல்பம் சாங் வெளியிட்டு வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அதே போல இந்த வருடமும் ஒரு பாடம் வரும் என தெரிகிறது.
அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.