Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் – ஜனாதிபதி விசேட கவனம்

April 7, 2019
in News, Politics, World
0

சிறந்ததோர் எதிர்கால தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொள்கை கோட்பாடுகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாரணர் இயக்கத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெயாங்கொட சியனே தேசிய கல்வி கல்லூரியில் நேற்று   இடம்பெற்ற 12ஆவது தேசிய சாரணச் சிறுவர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்துள்ளார்.

சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும்போது குறைந்தது அது பாடசாலை பிள்ளைகளில் 25 வீதத்தையேனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்க பண்பாடுகளினால் வளம்பெற்ற எதிர்கால தலைமுறை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு சாரணர் இயக்கம் மிகவும் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.

இலங்கை சாரணர் தலைமையகத்தின் மூலம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேசிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணச் சிறுவர் முகாம் ‘எமது தாய் நாடு எமது மரபுரிமை’ என்ற கருப்பொருளின் கீழ் இன்று முதல் ஏப்ரல் 08ஆம் திகதி வரை வெயாங்கொட சியனே தேசிய கல்வி கல்லூரியில் இடம்பெறுகின்றது.

இந்த முகாமில் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்துள்ள 07 வயதுக்கும் 11 வயதிற்கும் இடைப்பட்ட 7500 சாரணச் சிறுவர்களும் சுமார் 750 ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளதுடன், முதல் முறையாக தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த சாரணச் சிறுவர்களும் சுமார் 300 சாரண தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன, தலைமை சாரணர் ஆணையாளர் பொறியிலாளர் மெரில் குணதிலக்க உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

மோடி, தேசப்பற்றுக்கு புதிய அர்த்தத்தை மக்கள் மத்தியில் கற்பிக்க முயற்சி

Next Post

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று  போராட்டம்

Next Post

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று  போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures