Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

September 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

கனடாவில் வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களின் அடிப்படையில், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த தொகை ரூ.200 மில்லியனைத் தாண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் கனடா வருகை விசா, வேலை அனுமதி (Work Permit), சிறுவர்களுக்கான பாடசாலை விசா உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இலங்கையில் இரத்தினக்கல் உரிமம் (Gem Licence) பெற்றுத் தருவது மற்றும் அரசாங்கத்துடன் பல்வேறு ஒப்பந்தங்கள் இருப்பதாகக் கூறியும் பொதுமக்களை நம்ப வைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 1988/89 காலப்பகுதியில் கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக சந்தேகநபர் தம்மிடம் தெரிவித்ததாகவும் சில பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

இரண்டரை மாதங்களுக்குள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து, ஒவ்வொருவரிடமிருந்தும் பெருந்தொகையான பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒரு பயணியிடம் போலியான கனேடிய விசா ஒன்றை வழங்கி, அதற்காக சுமார் ரூ.15 மில்லியன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகநபர் மேலும் பல நிதி மோசடி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாங்களும் பணத்தை இழந்துள்ளதாகக் கூறும் பலர் தற்போது பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து உரிய முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

24 புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17, 18இல் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!

Next Post

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

Next Post
இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர் லீக்கில் அப்கன்ட்றி லயன்ஸிடம் பணிந்தது கலம்போ எவ்சி

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர் லீக்கில் அப்கன்ட்றி லயன்ஸிடம் பணிந்தது கலம்போ எவ்சி

September 9, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்

September 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

தொடர்ந்து சபை இடையூறு விளைவித்தால் தண்டனை ; அர்ச்சுனா இராமநாதனை எச்சரித்தார் ஹேமாலி வீரசேகர

September 9, 2026
இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

இந்தியாவில் கைவிடப்பட்ட நிலையில் 05 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

September 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures