கனடாவில் இருவர் மரணம் ஒருவர் ஆசியா நாட்டவர்

கனடாவில் இருவர் மரணம் ஒருவர் ஆசியா நாட்டவர்

குடிபோதையில் காரை ஓட்டியதால் இருவர் பலி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடா நாட்டில் மது அருந்துவிட்டு காரை ஓட்டியதால் இருவர் பலியான விபத்தில் வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் தான் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது.

கடந்தாண்டு மே 2ம் திகதி Ali Montoya(21) என்ற வாலிபர் சொகுசு கார் ஒன்றை ஓட்டிச்சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு Macleod Trail என்ற பகுதிக்கு கார் வந்தபோது வாகனங்கள் நிற்பதற்கான சிவப்பு விளக்கு போடப்பட்டது.

ஆனால், மணிக்கு 98 கி.மீ வேகத்தில் பறந்த அந்த கார் சிவப்பு விளக்கை மதிக்காமல் தாறுமாறாக சென்றுள்ளது.

அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த வேன் மீது பலமாக கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் வேனை ஓட்டிச்சென்ற Amritpal Kharbanda(46) என்ற நபர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த Jillian Lavallee(25) என்ற இளம்பெண் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இருவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாரணையை தொடங்கிய பொலிசார் விபத்து ஏற்படுத்திய வாலிபரை சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்தது நிரூபணம் ஆனது.

வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி நேற்று குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும், விடுதலை ஆகும் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு வாகனங்களை ஓட்ட தடையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.accident001accident002accident003accident004

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News