Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான சவால்களின் காரணமாகவே உள்நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார். 

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது இயற்கை பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பில்லியன் கணக்கில் இழப்பீடுகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றமானது உள்நாட்டு நிர்வாகத் தவறு அல்ல, மாறாக அது முற்றிலும் சர்வதேச காரணிகளால் உருவானது என்று அவர் வலியுறுத்தினார். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உலக அளவில் எண்ணெய் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளன. 

இந்த சர்வதேச யுத்த சூழலானது இலங்கை போன்ற நாடுகளை மட்டுமன்றி இந்தியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளையும் கூட பாதித்துள்ளது. 

உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியாவே கடந்த சில வாரங்களில் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதுடன், இந்திய ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

காப்புறுதி கட்டணங்களின் உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளால், அரசாங்கத்திற்கு கட்டுப்படுத்த முடியாத எல்லைக்கு அப்பால் இந்த விலை அதிகரிப்பு சென்றுள்ளதாகவும், இதனாலேயே நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய நேரிட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

விலை அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், அரசாங்கம் இன்னும் மக்களுக்கு பெருமளவு மானியங்களை வழங்கி வருவதாக அசித நிரோஷன தெரிவித்தார். 

அதன்படி, டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாயும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாயும் அரசாங்கம் நட்டத்தைத் தாங்கி மானியமாக வழங்கி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் 5ஆம் கட்ட தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் ஸ்திரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் இந்த தற்காலிக விலை மாற்றங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்ட அவர், சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் மக்களுக்கு சாதகமான விலையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

Previous Post

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Next Post

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

Next Post
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures