Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒருபுறம் மத்திய கிழக்கு போரின் நெருக்கடியினால் ”மகா வலி” ; மறுபுறம் அரசின் ”மகாவலி”! – ரவிகரன் 

March 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

ஒருபுறம் மத்திய கிழக்கு போரின் பொதுநெருக்கடியின் ”மகா வலி”யை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் ”மகாவலி”யையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. டித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை மட்டுமல்ல, புயலுக்குள்ளும் எங்கள் காணிகளை ஊடறுத்து வேலி போட்ட உங்கள் ”மகாவலி”யையும்தான் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது  நாளாக நடைபெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

 அவர்அங்கு   மேலும் உரையாற்றுகையில்,

உலகமெங்கும் நெருக்கடிநிலை நிலவும் சமகாலத்தில் எம்முன்னுள்ள முதற்கேள்விதான்,இவ் அரசாங்கம், இந் நெருக்கடிநிலையை நிலைகுலையாது கையாள்கிறதா?இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

உலகளாவிய பொது நெருக்கடி நிலைக்கு, கொள்கை நிலையிலான திடமான முடிவை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கின்ற போது நிகழ்வுகளுக்கான எதிர்வினையை மட்டுமே தான் அடுக்கடுக்காக ஆற்றுகின்றதோ என்றே என கேட்கத்தோன்றுகிறது.

முடிவெடுப்பதில் அடிக்கடி ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், ஒரு முறையான நீண்டகாலத் திட்டம் அரசிடம் இல்லையோ என எண்ணத்தோன்றுகிறது. பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து கட்டமைக்கப்பட்ட தீர்வுகளை தயாரிப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதாகவே எமக்கு புலப்படுகிறது.

எரிபொருளுக்கான நெடுவரிசைகளும் பதுக்கல்களும் கடந்த மாதத்தின் கடைசி நாளிலேயே தொடங்கிவிட்டது.இரண்டு கிழமைகள் கடந்தே கியூ ஆர்  முறைமை கொண்டுவரப்படுகிறது. ஒன்றரை மாதத்திற்குரிய எரிபொருள் முதல் 10 நாள்களுக்குள் தீர்ந்துவிட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.

 இப்படியான சடுதியான கேள்வி அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறியது யார்?இப்போது நிகழ்ந்த பதுக்கல்களுக்கு பொறுப்பேற்பது யார்?ஓர் அரசாக, நீங்கள் தானே? உலகளாவிய நிகழ்தகவுகளை முன்கூட்டியே கணித்து, ஏற்படவல்ல தாக்கங்களை முன்கூட்டியே கருதி, பல படிகளில் சோதித்து, முறைப்படி நடைமுறைப்படுத்துவதையே ஓர் அரசாக நீங்கள் செய்திருக்கவேண்டியது நடைமுறையிலுள்ள கியூ.ஆர்  முறைமையை காலத்துக்கேற்ப இற்றைப்படுத்தாமையே சமகால வாரத்தின் சறுக்கல்களாகின்றன.

ஒவ்வொரு பிரச்சினை வருகின்ற போதும் அதற்குரிய தீர்வைக் கண்டு முறைமையை இற்றைப்படுத்துவதென்பது வெள்ளம் வர வர தற்காலிக அடைப்புகளை இடுவதுக்கு ஒப்பாகிறது.வெள்ளம் வருமுன்பாகவே அணை கட்டுவதே ஓர் அரசுக்கு அணி. 

ஒரு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் மீண்டும் மாற்றியமைக்கப்படுவது என்பது திட்டமிடல், சோதனை செய்தல், மற்றும் களநிலையை புரிந்துகொள்வதில் ஏற்படும் தோல்வியையே பிரதிபலிக்கிறது.

பொதுநெருக்கடி நிலையை எதிர்கொள்ள தற்பொழுது அரசாங்கம் முன்வைத்துள்ள புதன்கிழமை சிக்கன விடுமுறை தாங்கள் எதிர்பார்த்த அளவிலான பெறுபேற்றைத் தந்துள்ளதா? என கேட்கிறேன்.

கிட்டத்தட்ட 20வீத  மனித மூலதனத்தை குறித்த நாளில் இழந்து நாம் சேமித்தது என்ன? கடந்த செவ்வாய்க்கிழமையோடு ஒப்பிடுகையில் புதன் கிழமையில்,மொத்த மின்சக்தி  1.17 ஜிகாவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2வீத குறைவு.பகல்நேர உச்ச தேவை 113.6 மெகா வாட் (3.9வீதகுறைவு) எரியெண்ணெய் பயன்பாடு 0.32ஜிகாேவாட் மணிக்கு குறைந்துள்ளது. அதாவது 2.1வீதம். ஒரு கிழமைக்குரிய 20வீத மனித உழைப்பை ஒரு நாளில் இழந்து 2வீத அளவான எரியெண்ணெயை (தேமல் ஒயில்) மிச்சப்படுத்துவது இலாபகரமானதா? என கேட்கிறேன்.

மேலும்  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, ஒருபுறம் இந்தப் பொதுநெருக்கடியின் மகா வலியை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் மகாவலியையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.

டித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை மட்டுமல்ல, புயலுக்குள்ளும் எங்கள் காணிகளை ஊடறுத்து வேலி போட்ட உங்கள் மகாவலியையும் தான். இப்போது நெடுவரிசைகளிலும் பதுக்கல்களிலும் நாங்கள் எதிர்கொள்வதும் மத்தியகிழக்கின் அதிர்வுகளை மட்டுமல்ல! மாறாக கொக்குத்தொடுவாய் மத்தியில் அடாத்தாக உப்பளம் அமைக்கவிட்ட உங்கள் மகாவலியையும் தான்.

கால்கடுக்க காத்திருந்து எரிபொருள் வாங்கி கடலுக்குச் சென்றாலும் என்ன பயன்?அங்கு நீங்கள் கட்டுப்படுத்த தவறிய சட்டவிரோத தொழில்கள் ஒருபுறம். இறைமை தொலைந்த வடகடலில் உலவும் இந்திய இழுவைப்படகுகள் மறுபுறம் வெறும் படகோடு கரைக்கு மீள்வது தான் உங்கள் அரசு எங்கள் மீனவர்களுக்கு இதுவரை வழங்கியுள்ள நீதி   என்றார்.

Previous Post

 எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Next Post

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

Next Post
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்!

நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்!

October 25, 2026
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில் மதுபான போத்தல்களை குழி தோண்டி வைத்து விற்பனை செய்தவர் கைது!

October 25, 2026
பலாலி காணி விடுவிப்புப் போராட்டம்: ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பலாலி காணி விடுவிப்புப் போராட்டம்: ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 25, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

செல்வராசா கஜேந்திரனிடம் 3 மணிநேர விசாரணை!

October 25, 2026

Recent News

நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்!

நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்!

October 25, 2026
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

யாழில் மதுபான போத்தல்களை குழி தோண்டி வைத்து விற்பனை செய்தவர் கைது!

October 25, 2026
பலாலி காணி விடுவிப்புப் போராட்டம்: ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பலாலி காணி விடுவிப்புப் போராட்டம்: ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 25, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

செல்வராசா கஜேந்திரனிடம் 3 மணிநேர விசாரணை!

October 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures