ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படம் – ‘தேவி-2’. இப்படம் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் நடந்த ‘LKG’ படத்தின் வெற்றிவிழாவில் பேசும்போது தெரிவித்தார்.
அவர் சொன்னதன் அடிப்படையில் ‘தேவி-2’ ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி, அதாவது ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால்… இதே தினத்தில்தான் எ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், சாயிஷா நடித்துள்ள ‘வாட்ச்மேன்’ படமும் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு தரப்பு வெளியிட்டது மட்டுமல்ல ஏப்ரல் 12 வெளியீடு என்று விளம்பரமும் செய்து வருகின்றனர்.
இதனால் ஏ.எல். விஜய் இயக்கிய இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல படங்களை இயக்கி வரும் ஏ.எல். விஜய் வரவர ராமநாராயணன் போலாகிவிட்டார்.

