முனி படத்தில் தொடங்கிய ராகவா லாரன்சின் பேய் ஆட்டம் பார்முலா, காஞ்சனா, காஞ்சனா 2 என தொடர்ந்தது. இப்போது காஞ்சனா 3ம் பாகமும் உருவாகி உள்ளது.
ராகவா லாரன்சுடன் ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபிர் துகன் சிங், சத்யராஜ், சூரி, மனோபாலா, மயில்சாமி, யோகி பாபு, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கிஷோர், நெடுமுடி வேனு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் முடிந்த மறுநாள் அதாவது ஏப்ரல் மாதம் 19ந் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

