உளநலக் குறைபாடுள்ள 15 வயதுச் சிறுவனுடன் உக்ரேனியக் குடும்பத்தினரை நாடு கடத்திய கனடிய அரசு!

உளநலக் குறைபாடுள்ள 15 வயதுச் சிறுவனுடன் உக்ரேனியக் குடும்பத்தினரை நாடு கடத்திய கனடிய அரசு!

உளநலக் குறைபாடுள்ள 15 வயதுச் சிறுவன், இரண்டாம் முறையாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சாத்தியமுள்ளதற்கான மருத்துவ ரீதியான சான்றுகள் இருந்தும், அவனும் அவனது குடும்பத்தினரும் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் Vladyslav Zadorozhnyi ஐச் சந்தித்த இரு எல்லைக் காவல் அதிகாரிகள் “புறப்படத் தயாரா ?” என அவரிடம் வினவினர்.“எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, நான் மிகவும் மனக்கலக்கத்தில் உள்ளேன்” என Vladyslav Zadorozhnyi பதிலளித்தார்.

15 வயதான Vladyslav Zadorozhnyi , 34 வயதான அவரது தாயார் Maryna Zadorozhna மற்றும் 7 வயதான அவரது சகோதரர் Andriy ஆகியோர் எல்லைக் காவல் அதிகாரிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.Vladyslav இனது உற்ற நண்பர் Alex இனது பெற்றோரும் அவர்களுடன் விமான நிலையம் வந்திருந்தனர்.

Vladyslav குழந்தைப் பருவம் தொடக்கம், தடுப்புக் காவலில் இருந்த Andriy Ryabinin (Vladyslav இன் தாயாரின் கணவர்) தனியாக விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

கனடாவில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டமை, கடந்த வருடம் உக்ரேய்ன் நாட்டிலிருந்து தப்பி வந்தமை போன்ற காரணங்களால் Vladyslav மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தார். கடந்த வாரம் அவர் அதீத பயத்தாக்கம் (panic) காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய அரசு நீதிமன்றினால் அவர்களது அவசர மேன்முறையீடு நிராகரிக்கப் பட்டதன் காரணமாக இக்குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

vlady vladyslav-zadorozhnyi

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News