Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உமாபதி ராமையா நடிக்கும் ‘பித்தல மாத்தி’

June 14, 2024
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உமாபதி ராமையா நடிக்கும் ‘பித்தல மாத்தி’

நடிகர் உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பித்தல மாத்தி’ எனும் திரைப்படம், ஜூன் 14-ஆம் திகதியன்று பட மாளிகையில் மீண்டும் வெளியிடப்படுகிறது.

அறிமுக இயக்குநர் மாணிக் வித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பித்தல மாத்தி’ எனும் திரைப்படத்தில் உமாபதி ராமையா, பால சரவணன், வினிதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், காதல் சுகுமார், வித்யூலேகா ராமன், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.சரவணன் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட பல திரைப்படங்களில் தண்ணி வண்டி எனும் திரைப்படமும் இடம்பெற்றது. இந்த திரைப்படம் குறைவான பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர தவறியது. இந்த கதையின் மீது தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினர் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக இந்த திரைப்படத்தில் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு, ‘பித்தல மாத்தி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அதிகமான படமாளிகைகளில் வெளியிடப்படுகிறது. மேலும் இப்படத்தின் நாயகனான உமாபதி ராமையாவிற்கும், அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் தருணத்தில் இந்த திரைப்படம் மீண்டும் படமாளிகையில் வெளியிடப்படுவதால் வெற்றி பெறும் என படக் குழுவினர் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சரவணன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் உடல் நல குறைவு காரணமாக வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். புதுமுக கலைஞர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதால் இப்படத்தை வெளியிடுவதற்கு உடலளவில் ஆரோக்கியம் இல்லை என்றாலும் அந்த தருணத்தில் எம்மால் முடிந்த அளவு உதவினேன்.

மிகக் குறைவான பட மாளிகையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவரவில்லை. இதனால் தற்போது வெளியிடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்து, அதிகமான படமாளிகையில் வெளியிடுகிறோம். தற்போது இந்த திரைப்படத்திற்கு குறைந்தபட்ச வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ‘பித்தல மாத்தி’ என்ற திரைப்படத்தை தொடர்ந்து, யோகி பாபு நடிக்கும் ‘ஜோரா கையத்தட்டுங்க’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறேன். விரைவில் அதனை வெளியிடுவதற்கான பணிகளில்  ஈடுபடவிருக்கிறேன்” என்றார்.

Previous Post

தேர்தலுக்காக யாழ் மக்களுக்கு பொருட்களை வழங்கவில்லை – சஜித்

Next Post

பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Next Post
பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக அனுமதிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures