Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் : பறக்கும் கண்டனங்கள் 

August 4, 2026
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் : பறக்கும் கண்டனங்கள் 

தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தஞ்சையில் தி.மு.கவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் குறித்து முன்வைத்த விமர்சனக் கருத்துக்களை எதிர்த்து ஒருபுறம் சிலர் கண்டனம் தெரிவித்து வரும் அதேவேளை, உதயநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்னொரு புறமும் சிலர் கண்டனக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் 

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

“யாகாவாராயினும் நா காக்க” எனும் குறள் மொழியை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடைபிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழிமொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்புக்கு உகந்தது அல்ல. 

அரசுக்கு இடையூறு செய்வதற்கும் அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்திருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.”

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 

“நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் பொருந்தாத செயலாகும். 

ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும்.”

கனிமொழி எம்.பி

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.”

சென்னை மேயர் பிரியா 

“தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று ‘ஜனநாயகன்’  படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று பொலிஸாரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? பொலிஸ்  உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்.”

பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு

“தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்” 

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 

“ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் பற்றி A,B,C அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் திரிஷா பெயரை கூறினார். அது என்ன உலக மகா தப்பா அது. தண்ணீர் என்பது குடிப்பது தானே. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்? “திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா? மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை.

எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. இப்படித்தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இன்று அதே போல உதயநிதியை கைது செய்து வேனில் அழைத்து செல்கின்றனர். இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்துவிட்டார்.” 

Previous Post

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு

Next Post

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த ரட்னம் கழகத்துக்கு 3ஆவது நேரடித் தோல்வி!

Next Post
கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த ரட்னம் கழகத்துக்கு 3ஆவது நேரடித் தோல்வி!

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த ரட்னம் கழகத்துக்கு 3ஆவது நேரடித் தோல்வி!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெகு விமர்சையாக நடந்த ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீடு:விக்டர் ராஜலிங்கம் நெகிழ்ச்சி!

வெகு விமர்சையாக நடந்த ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீடு:விக்டர் ராஜலிங்கம் நெகிழ்ச்சி!

August 4, 2026
கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த ரட்னம் கழகத்துக்கு 3ஆவது நேரடித் தோல்வி!

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த ரட்னம் கழகத்துக்கு 3ஆவது நேரடித் தோல்வி!

August 4, 2026
உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் : பறக்கும் கண்டனங்கள் 

உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் : பறக்கும் கண்டனங்கள் 

August 4, 2026
இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் சந்திப்பு

August 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures