Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈழத் தமிழர் உரிமைக்காய் தளபதி விஜயின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் – கிருபா பிள்ளை

May 10, 2026
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம், முக்கிய செய்திகள்
0
ஈழத் தமிழர் உரிமைக்காய் தளபதி விஜயின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் – கிருபா பிள்ளை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழர்களின் சார்பில் நானும் வாழ்த்துகிறேன். குறுகிய காலத்தில் கட்சியைத் தொடங்கி, தமிழக மக்களின் மனங்களை வென்று ஆட்சிப் பொறுப்பெற்றுள்ளமை வரலாற்றுச் சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆட்சியை பொறுப்பெடுக்கும்போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகச் சில சவால்களுக்கு விஜய் முகம் கொடுத்தார். அதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது தமிழ் மக்கள் மத்தியில் சற்று விமர்சனத்தையும் கவலையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அது காங்கிரஸின் கடந்த கால செயற்பாடுகளால் ஆனது.

திருமதி சோனியா காந்தி அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசுக்கு ஆதரவை வழங்கி வரலாற்றுத் துரொகம் இழைத்தார். இன்று அவரது மகன் ராகுல் காந்தியுடன் விஜய் அவர்கள் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். இங்கு முள்ளை முள்ளால் எடுப்பதுபோல, தாயினால் ஏற்பட்ட களங்கத்தை மகனை வைத்து நீக்கும் ராஜதந்திரத்தை விஜய் ஆற்ற வேண்டும்.

அப்படிச் செய்தால், தமிழ்நாட்டு வரலாற்றில் விஜய் மிக முக்கியமான ஆளுமையாக தலைவராக உருவெடுப்பார். அத்துடன் முதல்வர் விஜய் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்துடன் அவரது ஆட்சி தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியாக அமையவும் வாழ்த்துகள்.

ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Previous Post

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 63 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures