ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இசைத்துறையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் இளையராஜா. பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ள அவர் இப்போது வரை படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா, தனது தந்தையின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கப் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த படத்தை தானே இயக்க முடிவெடுத்து இருப்பவர், இளையராஜா வேடத்தில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார் என்றும் நினைக்கிறார். இப்படத்திற்கு ராஜா தி ஜர்னி என்று தலைப்பு வைக்க திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் சம்மதிக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நகர்வு வேகமாக நகரும் என தெரிகிறது.